Thursday, July 17, 2008

தமிழா ! தமிழா !

ஒரு இனத்தை அழிப்பதற்கு ஒன்று படை எடுத்து சென்று அழிக்கவேண்டும் அது முடியாவிட்டால் கூட இருந்தே குழி பறிக்கவேண்டும் இதில் ஆரிய இந்தியா தமிழர்களை அழிக்க தேர்ந்தேடுத்து இருப்பது இரண்டாவது வழிமுறையாகும் இதை சற்று விரிவாக பார்ப்போம்.ஒரு இனத்தை அழிக்கவேண்டுமானால் அவர்களது பூர்வ நிலம் மற்றும் பொருளாதார வளம் உயிர் நாடியான நீர் அதை ஒட்டிய விவசாயம், பண்பாடுகாளன வீரம்,கலாசாரம் ஆகியவற்றை பூண்டோடு அழிப்பதாகும். இதில் தமிழர்பால் பகைமை அணுகுமுறையையே இந்திய அரசு கொண்டிருக்கிறது. காவிரி நீர்ச் சிக்கலில், கன்னடர் பக்கமும், முல்லைப் பெரியாறு அணைச்சிக்கலில் மலையாளிகள் பக்கமும் இந்திய அரசு இருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் தமிழர்களுக்குப் பகைவர்களாக யார் யார் மாறுகிறார்களோ அவர்கள் எல்லாம் இந்திய அரசுக்கு நண்பர்களாகவும் வேண்டியவர்களாகவும் மாறிவிடுகிறார்கள். நடுவண் அரசாங்கத்தில் எக்கட்சி அல்லது எக்கூட்டணி ஆட்சி நடத்தினாலும் சாரத்தில் இக்கொள்கையே கடைபிடிக்கப்படுகிறது.அன்று காவிரிதாயை தடுத்து சிறு சிறு மணல் குன்றுகளை ஏற்படுத்தி தடுத்த கன்னட மன்னர்களை சோழ மன்னர்கள் புறமுதுகு இட்டு ஓடசொய்து மணல் குன்றுகளை அகற்றி மீண்டும் காவிரிதாயை தமிழ் நாட்டிற்கு வரசெய்தான் அன்று மணல் குன்று இன்று அணை.இப்போது செய்யமுடியவில்லை ஏன்?இன்று விவசாயம் பொய்த்து போய் கட்டட வேலை செய்யவும் கக்குஸ் கழுவவும் வெளி நாட்டுக்கும் வெளி மா நிலங்களுக்கும் செல்கிறார்கள் ஆனால் நமது சொந்த மானிலத்தை பார்த்தால் மார்வாடிகளும் ,குசராத்திகளும் ஏனைய இனத்தவரும் சொகுசாக வாழ்கிறார்கள்.அதிலும் இந்த மலையாளிகளின் கொட்டம் சத்தமின்றி உச்சத்துக்குப் போய்க் கொண்டிருக்கிறது. டீக்கடையில் ஆரம்பித்து இவர்களின் ஆக்கிரமிப்பு எல்லை மீறி விட்டது. ஊர் நாட்டிலிருந்து இங்கே வந்து ஒருத்தன் தொழில் செய்தால் பரவாயில்லை, மாமன், மச்சான், அண்ணன் தம்பி, சித்தப்பா, பெரியப்பா என எல்லோரையும் இங்கே இறக்குமதி செய்து விடுகின்றனர் இவர்கள் சிறந்த உழைப்பாளிகள் எனில் ஏன் ஊரை விட்டு நாடோடிகளாய் அலைகின்றனர். கேரளாவில் ஏன் குறிப்பிடத்தக்க அளவில் தொழிற்சாலைகள் இல்லை? காரணம் இவர்களின் குள்ள நரித்தனமும் கம்யூனிசப் போக்கும் தான். அங்கே பருப்பு வேகாமல், இங்கே வந்து டேரா போட்டுக் கொண்டிருக்கின்றனர்.சரி இந்த ஆரியர்கள் நம்முடைய வீரத்தையாவது மதித்தார்களா,இரண்டாம் உலக போரின் போது இங்கு வெள்ளையன் கேட்டான் உங்களுடைய வீரப்பரம்பரையினரின் ஆட்களை தாருங்கள் என்று அப்போதும் இந்த ஆரியர்கள் தமிழர்களை தள்ளிவிட்டு எனைய சிங்கு,வங்காளி,மாரத்தி போன்ற இனங்களையே சேர்த்தார்கள், ஆனால் வெள்ளயனுக்கும் தெரியும் வரலாற்றுக்கும் தெரியும் யார் முதலில் வீரத்துடன் போராடினார்கள் என்று .

சரி ஒருசாரரான மீனவர்களையாவது நிம்மதியாக விட்டார்களா?இதுவரை சற்றொப்ப 350 தமிழக மீனவர்களைச் சிங்களக் கடற்படையினர் இந்தியப் பெருங்கடலில் சுட்டுக் கொன்று விட்டனர். இந்தத் தமிழ் இனப்படுகொலை தொடர்கிறது. இந்தியக் கப்பற்படையோ இந்திய அரசோ சிங்களக் கப்பற்படைக்கு எதிராக மறுநடவடிக்கை எதுவும் எடுக்கவில்லையே ஏன்? இந்தியாவின் கடலோரக் காவல்படை சுழன்று சுழன்று சுற்றி வந்தபோதும் தமிழக மீனவர்களைச் சிங்களர் சுட்டுக் கொல்வதும் கடத்திச் செல்வதும் தடுக்கப்படவில்லையே ஏன்? தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிப் போய் மீன்பிடித்தால் அவர்களைத் தளைப்படுத்தலாம். அதைவிடுத்து அவர்களை சுட்டுக் கொல்வது என்ன ஞாயம்? தமிழகத்திற்குரிய கச்சத்தீவை இந்திராகாந்தி சிங்கள அரசுக்குக் கொடுத்ததால்தானே, எல்லை தாண்டித் தமிழக மீனவர்கள் வந்துவிட்டார்கள் என்ற குற்றசாட்டே வருகிறது. சாகின்றவர்கள் தமிழர்கள்; எனவே, சாகடிப்போர் இந்திய அரசுக்கு நண்பர்கள். சிங்களர்கள் நண்பர்கள் என்று சொல்வது கூட தவறு. இந்திய ஆளும் வர்க்கத்திற்கு அவர்கள் பங்காளிகள். சிங்களரும் இந்திய ஆளும் வர்க்கத்தினரும் ஆரியர்கள். வரலாற்றுக் காலந்தொட்டு அடுத்தடுத்த தலைமுறைக்குத் தமிழர்க்கெதிரான பகைநஞ்சை ஆரியம் கைமாற்றித் தந்துவருகிறது.சரி இதை எல்லாம் பார்த்து இங்குள்ள கட்சிகள் என்ன செய்கிறது? தில்லி ஏகாதிபத்தியத்திற்கு மட்டுமின்றி பன்னாட்டு முதலாளிகளுக்கும் தமிழ்நிலத்தை விற்கும் ‘முத்தமிழ் விற்றவர்’ முதல்வர் கலைஞர் கருணாநிதி ஒருபுறம். பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த ஊதாரி்த்தனமாக 100 கார்களில் பெட்ரோல் போட்டுக் கொண்டு போக்குவரத்தை அடைத்துக் கொண்டு விளம்பரம் தேடிச் செல்லும் நடிகர் (கம்) அரசியல் பிழைப்புவாதி விசயகாந்த் ஒருபுறம். வெப்பமயமாதலால் மக்கள் வெயிலில் வெந்து சாவதைப் பற்றி ‘மிகவும் கவலையுற்று’ ஊட்டியில் குலுகுலுவென ஏசி அறையில் மக்களின் கஷ்டத்தைப் பற்றி சிந்தித்துக் கொண்டு, ஒரே அறையில் இருந்து கொண்டு நாட்டுநடப்புகளைப் பற்றியெல்லாம் துல்லியமாகக் கண்டிறிந்து ‘அறிக்கை’ மட்டுமே விடும் அரசியல்வாதியாக செயலலிதா ஒருபுறம். "நாங்களும் இருக்கோம்ல" என்றபடி பதவி தந்த இந்திய அரசைப் பற்றி வாய்கூட திறக்காமல் தமிழக அரசை மட்டுமே கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திக் கட்சி வளர்க்கும் இராமதாஸ் ஒருபுறம். இவர்கள் மட்டுமா? தமிழகத்தின் தலைச்சிறந்த அரசியல் நகைச்சுவையாளர் வைகோ, "அடங்க மறு" என்று அறிமுகமாகி ‘சீட் கொடுத்தால் அடங்கிப் போ’ என்று புதியத் தத்துவம் படைத்த திருமா, அகில இந்திய சமத்துவக் கட்சி என்கிற தனியார் பொது நிறுவனத்தின் உரிமையாளர் நாட்டாமை சரத்குமார், 2011-ல் தமிழக முதல்வராகப்போகும் லட்சிய தி.மு.க. டி.ஆர். இராசேந்தர், திடீர் கட்சியான அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் தலைவர் நடிகர் கார்த்திக் உள்ளிட்ட அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்றைத் தான் சொல்ல வருகிறார்கள். இந்திய அடிவருடியாகவும்,அந்த இந்தியாவிற்கு தமிழ் இனத்தை அதிக விலைக்கு விற்பதில் தான் இவர்களுக்குள் போட்டி, அறிக்கை சண்டை, அதிகாரச் சண்டை எல்லாம். மற்றபடி இவர்கள் கொள்கைகளற்ற கொள்ளைக் கூட்டணி என்ற வகையில் தெளிவாக அம்பலப்பட்டு நிற்கிறார்கள்.இதற்கு மாற்றாக தமிழக மக்களின் அரசியல் நிலை எதுவாக இருக்க வேண்டும்..?

தமிழ்த் தேசிய இனத்தின் தன்னுரிமையைப் பாதுகாப்பதாகவும், தமிழ் இனத்தை உலகமயப் பணக்காரனுக்கு மட்டுமின்றி தில்லிக்காரனுக்கும் விற்கும் இந்தியனுக்கு எதிரானதாக புரட்சிகரத் தமிழ்த் தேசிய அரசியல் நிலையைத் தான் நாம் முன்னெடுக்க வேண்டும். மார்வாடி, குசராத்தி சேட்டுகள் தமிழகத்தின் பெரு வணிகங்களை கைப்பற்றத் தொடங்கியுள்ளனர். பீகாரிகள் ரயில்வே வேலை, ரோடு வேலை என தமிழகத்திற்குள் நுழைந்து விட்டனர்.

தமிழத்திலேயே தமிழன் அகதியாக அலையும் நாள் வெகு தொலைவில் இல்லை எனத் தெரிகிறது. அயலவன் வந்து சுரண்ட நமது தமிழ் மண் வேட்டைக்காடு அல்ல. நமது எதிரி உலகமய முதலாளிகள் மட்டுமல்ல தில்லி ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகளாக இங்கு செயல்படும் இந்தியத் தேசியத்தை ஆதரிக்கும் அனைத்துக் கட்சிகளும் தான் என உணர வேண்டும்.நாம் முன்னிறுத்த வேண்டியது தமிழ்த் தேசியத்தைத் தானே தவிர பெருமுதலாளிகள் தலைமையிலான இந்தியத் தேசியத்தை அல்ல!

- தமிழ்

1 comments:

Vijayasankar Ramasamy said...

fantastic jai.

Keep it up.