Thursday, November 27, 2008

இன்று

தேச பாதுகாப்புக்காக கொண்டு வந்த பொடா சட்டத்தை சொந்த விருப்பு வெறுப்புக்காக பயன்படுத்திய ஜெயலலிதா ஒருபுறம்
தேசிய பாதுகாப்பு சட்டத்தை நேற்று கேலி கூத்தாக்கிய கருணாநிதி ஒருபுறம்
ஒரு மத்திய அமைச்சர் மகளை விடுவிக்க பத்து தீவிரவாதிகளை விடுவித்த காங்கிரஸ் கட்சியினரின் தேச பற்று ஒருபுறம்
இந்திய கடல் எல்லையை பாதுகாக்காமல் சோமாலிய கடல் கொள்ளையரை பிடிக்க கடற்படையை அனுப்பும் மத்திய அரசு
ஒருபுறம்
ஐந்து கோடி லஞ்சம் தந்து திகார் சிறையில் இருந்து பீகார் சிறைக்கு மாறி உல்லாசம் அனுபவிக்கும் பப்பு யாதவை தேர்ந்தெடுக்கும் நமது கேடுகெட்ட அரசியல் சாசனம் மறுபுறம்
ஒவ்வொரு நாளும் நமது நாட்டை உயர்வாக பேசி பேசி இன்று பிற நாட்டவரின் துக்க விசாரிப்பிற்கும் ஏளன பார்வைக்கும் ஆளாகி நிற்கும் நம் நிலையை கண்டால் நின்று விடவா என இதயம் கேட்கிறது. கண்களில் நீர் துளிர்கிறது. என் இதயம் நிறைந்த இந்தியா இன்று எங்கே செல்கிறது?

Tuesday, November 25, 2008

தினந்தோறும்....

தினந்தோறும் தீபாவளிதான்
வெடிச்சத்தமில்லாமல் விடியாதெங்கள் காலை

நரகாசுரர்களும் ராவணர்களும்
குறிபார்த்தடிப்பது சில சிறு விதைகளைதான்
அவர்களுக்குத்தெரியும் நாங்கள் விருட்சமாவோம் என

செஞ்சோலையில் வெடித்ததில் சிதறியதெல்லாம்
இளம் ரோஜாக்கள்
ஏ கடவுகளர்களே இன்னுமா அதர்மம் வேண்டும் நீங்கள்
வந்துசேர- உயிர்த்தெழ...

ஏ மா மனிதர்களே
என்றைக்கேனும் நீ்ங்கள் மரணபயத்தோடு எழுந்திருக்கிறீ்ர்களா?
உங்கள் விரல்கள் நடுங்க- போர்த்தப்பட்ட பிணக்குவியல்களில்
உறவுகளை தேடியிருக்கவாய்த்ததா?
நாங்கள் தினமும் இதைதான் செய்கிறோம்...

எங்களுக்கு விட்டுப்போவதற்கென ஓர் வரலாறு இருக்கிறது
நாளைய எனதுபிணத்தின்மீது நடந்துபோகப்போகும்
கழுகுகளே உங்களுக்கு இரண்டு வாய்ப்பு

ஒன்று இதை ஒரு சாட்சியாய் நின்று பார்த்திருப்பது
அல்லது
ஓரினம் அழிக்கப்படுவதை எதிர்த்து ஓர் குரலாவது கொடுப்து

எது செய்தாலும் சம்மதமே....

-ரிஷி