தினந்தோறும் தீபாவளிதான்
வெடிச்சத்தமில்லாமல் விடியாதெங்கள் காலை
நரகாசுரர்களும் ராவணர்களும்
குறிபார்த்தடிப்பது சில சிறு விதைகளைதான்
அவர்களுக்குத்தெரியும் நாங்கள் விருட்சமாவோம் என
செஞ்சோலையில் வெடித்ததில் சிதறியதெல்லாம்
இளம் ரோஜாக்கள்
ஏ கடவுகளர்களே இன்னுமா அதர்மம் வேண்டும் நீங்கள்
வந்துசேர- உயிர்த்தெழ...
ஏ மா மனிதர்களே
என்றைக்கேனும் நீ்ங்கள் மரணபயத்தோடு எழுந்திருக்கிறீ்ர்களா?
உங்கள் விரல்கள் நடுங்க- போர்த்தப்பட்ட பிணக்குவியல்களில்
உறவுகளை தேடியிருக்கவாய்த்ததா?
நாங்கள் தினமும் இதைதான் செய்கிறோம்...
எங்களுக்கு விட்டுப்போவதற்கென ஓர் வரலாறு இருக்கிறது
நாளைய எனதுபிணத்தின்மீது நடந்துபோகப்போகும்
கழுகுகளே உங்களுக்கு இரண்டு வாய்ப்பு
ஒன்று இதை ஒரு சாட்சியாய் நின்று பார்த்திருப்பது
அல்லது
ஓரினம் அழிக்கப்படுவதை எதிர்த்து ஓர் குரலாவது கொடுப்து
எது செய்தாலும் சம்மதமே....
-ரிஷி
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment