Tuesday, July 1, 2008
கச்சா எண்ணெய் விவகாரத்தின் பின்னணி என்ன?
கச்சா எண்ணெய் விலைகள் கூடுவதற்கு உலகளவில் பல காரணங்கள் கூறப்பட்டாலும், ஐந்து காரணங்கள் மிகவும் முக்கியமானவை:உலகளவில் எண்ணெய் உபயோகம் உயர்ந்துள்ளது. குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளில் உபயோகம் அதிகமாக இருக்கிறது.விலை சரியாமல் இருப்பதற்காக சில சமயம் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் உற்பத்தியை நிறுத்தி விடுகின்றன. இது செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி விலைகளை மறுபடி கூட்ட உதவுகிறது.சில சமயம் சில எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஏற்படும் உள்நாட்டுப் பிரச்னைகள் அண்டை நாடுகளுடன் ஏற்படும் பிரச்னைகள் ஆகியவைகளால் எண்ணெய் உற்பத்தி குறைகிறது அல்லது நிறுத்தப்படுகிறது.
எண்ணெய் விலை வருங்காலங்களில் உயரும் என்ற நம்பிக்கை எதிர்பார்ப்பு உள்ளவர்கள் மார்ஜின் பணத்தை செலுத்தி டிரேட் செய்யலாம். இதில் உலகளவில் பலர் ஈடுபட்டுள்ளதால், இதுவும் தற்போது கச்சா எண்ணெய் விலை கூடுவதற்கு ஒரு காரணமாக இருக்கிறது.டாலர் மதிப்பு, கூடிவரும் பணவீக்கம், குறைந்து வரும் பங்குச் சந்தை ஆகியவைகளால், முதலீட்டாளர்கள் தங்கம், எண் ணெய் முதலீடுகளை நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றனர். ஆதலால், எண்ணெய் வழுக்கிக் கொண்டு கீழே இறங்காமல் மேலே ஏறிக்கொண்டு இருக்கிறது.அமெரிக்காவில் எண்ணெய் உபயோகம் குறைந்துள்ளது என்று வந்த புள்ளி விவரத்தை அடுத்து, சென்ற வாரம் ஒரு பேரல் 132 டாலர் அளவிற்கு குறைந்தது.
ஆனால், எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 150-170 டாலரை எட்டும் என்று விடுத்த அறிவிப்பைத் தொடர்ந்து விலை மறுபடி கூட ஆரம்பித்தது. தற்போது 140யை தாண்டி நிற்கிறது.கச்சா எண்ணெய் என்றால் என்ன?கச்சா எண்ணெய் என்றால் ஹைட்ரோ கார்பன் கலந்த ஒரு திரவம்.
இனிப்பான கச்சா எண்ணெய் : கச்சா எண்ணெயில் எத்தனை வகைகள் உள்ளன? வெஸ்ட் டெக்சாஸ் இண்ட்ர்மீடியேட் கச்சா எண்ணெய் தான் உலகிலேயே சிறந்த எண்ணெய். மற்ற கச்சா எண்ணெய்களை விட 2 முதல் 4 டாலர் வரை அதிகமாக விற்கப்படுகிறது. இதில் குறைந்த அளவே சல்ப்பர் இருப்பதால் (0.24 சதவீதம்) இது இனிப்பான கச்சா எண்ணெய் என்று அழைக்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் உபயோகிக்கப்படும் கச்சா எண்ணெய் பெரும்பாலும் அதிக சல்ப்பர் கொண்ட மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து உற்பத்தி செய்யபடுவதாகும்.
முக்கியமான பொருளா என்ன?: ஒரு பேரல் என்றால் என்ன?ஒரு பேரல் என்றால் 42 அமெரிக்க காலன். அதுவே லிட்டரில் பார்த்தால் 158.98 லிட்டர். ஒரு டன் கச்சா எண்ணெய் என்பது 7.33 பேரல்.எண்ணெய் மேல் ஏன் இவ்வளவு பிரியம் காட்டுகிறோம். அவ்வளவு முக்கியமான பொருளா என்ன?ஆமாம். உலகளவு எரிசக்தி தேவையில் 40 சதவீதத்தை கச்சா எண்ணெய் தான் சமாளிக்கிறது. உலகளவில் ஒரு நாளைக்கு 76 மில்லியன் பேரல் உபயோகப்படுத்தப்படுகிறது. அமெரிக்காவில் தினசரி 20 மில்லியன் பேரல்களும், சீனாவில் தினசரி 5.6 மில்லியன் பேரல்களும், ஜப்பானில் தினசரி 5.4 மில்லியன் பேரல்களும் உபயோகப்படுத்தப்படுகிறது.
எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு என்றால் என்ன?
உலகின் 40 சதவீதம் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளான அல்ஜீரியா, இந்தோனேஷியா, ஈரான், ஈராக், குவைத், லிபியா, நைஜீரியா, கத்தார், சவூதி அரேபியா, யூ.ஏ.இ., ஆகிய நாடுகள் அடங்கிய கூட்டமைப்பு தான் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு. இந்த நாடுகளிடம் தான் 75 சதவீத எண்ணெய் ரிசர்வ்கள் உள்ளன. உலகின் 55 சதவீத ஏற்றுமதியை இவர்கள் தான் செய்து வருகின்றனர்.இந்தியா ஒரு நாளைக்கு எவ்வளவு எண்ணெய் உபயோகிக்கிறது?
இந்தியா முதல் 10 இடங்களில் ஒன்றாக வருகிறது. தினசரி 2.2 மில்லியன் பேரல்கள் எண்ணெய் உபயோகப்படுத்தப்படுகிறது.இந்தியாவில் எண்ணெய் கிடைப்பதில்லையா?இந்தியாவின் ஒரு நாள் எண்ணெய் உற்பத்தி 0.8 மில்லியன் பேரல்கள் தான். 70 சதவீதம் நாம் இறக்குமதியையே நம்பி இருக்கிறோம். தற்போது ராஜஸ்தான், பாம்பே ஹை போன்ற இடங்களில் எண்ணெய் வளங்கள் கிடைக்க ஆரம்பித்திருப்பதால் வருங்காலங்களில் இவை நமது தேவையை சிறிது பூர்த்தி செய்யும் என நம்பலாம்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்ன செய்கிறது?இந்தியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு செய்வதற்கு மிகவும் குறைந்த அளவே செலவு ஆவதால், ரிலையன்ஸ் பல நாடுகளில் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து, சுத்திகரிப்பு செய்து எரிபொருளாக்கி ஏற்றுமதி செய்கிறது.
இந்தியாவில் மாற்று எரிபொருளே இல்லையா?பல மாற்று எரிபொருட்கள் இருந்தாலும் அவை போதுமானதாக இல்லாததால் எண்ணெயையே நம்பி இருக்க வேண்டியிருக்கிறது. ஆதலால், உபயோகங்களை குறைத்து நாட்டையும், வீட்டையும் வளமாக்க பாடுபடவேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment