Friday, June 11, 2010

புரட்சி என்பது..........

ஒன்றுபடு,
போராடு.,
வெற்றிபெறுவோம்..,
புரட்சியின் விதி வரையறுக்கப்
படாதவை..

எல்லா இடங்களிலும்
நசுக்கப் படும் மக்களுக்காக புரட்சி
பின்
நசுக்கப் படும் புரட்சி ..

மறுக்கப் பட்ட நீதிக்காக புரட்சி
புரட்சி செய்து ஆட்சி பிடிப்பவனுக்கு
பிடிக்காத வார்த்தை புரட்சி..

எல்லா வயிறும் எரியும்
ஏழைக்கு பட்டினியாலும்
பணக்காரனுக்கு அஜீரனத்தாலும் ..

கடவுள், பக்தன்
முதலாளி, தொழிலாளி
அரசு, மக்கள்
எப்போதும் லாபம்
தரகர்களுக்கு மட்டும் ..

உன் குடும்பத்தின்
பட்டினி போக்கிப்
பின்
வீதிக்கு வா..
போராடு...
சிறை செல் ..
மரித்துப் போ ..
சுவரொட்டியில் சிரி..

சே.
மாவோ..
லெனின் ...
மார்க்ஸ் ....
பெரியார் ...
கொள்கைகளை வீதியில் முழங்கு
குல தெய்வத்துக்கு
கெடா வெட்டு ..

இனி
ஆயுதம் துணை வராது
அரசாயுதம் அழிக்கும் உன்னை ,
அறிவுப் புரட்சி செய்
அனுதினமும் தொழில் செய்
பங்கெடுப்பவனுக்கும்
பங்கு கொடு ..

புரட்சி என்பது மாற்றத்தைக் கொண்டு வர
முதலில் நீ மாறு...

0 comments: