Friday, October 23, 2009

விதியே என்செய நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை!

என் இனிய நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு உங்களை இந்த பதிவின் மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி (!) அடைகிறேன். உங்கள் ஒவ்வொருவருடனும் நான் பல விஷயங்கள் தனிப்பட்ட முறையில் பேசி இருக்கலாம். ஆனால் இந்த பதிவு உங்கள் அனைவரையும் ஒரு புள்ளியில் இணைப்பதற்கான சிறு முயற்சியே!

நம் பேச்சு ,நம் எண்ணம் ,நம் செயல் மற்றும் எதிர்காலம் . இவை அனைத்திலும் "தமிழ்" என்ற மொழி இரண்டற கலந்துள்ளது.ஆனால் இந்த மொழி பேசுகிற ஒரே காரணத்திற்காக நம் இனமே இந்த நாகரிக உலகத்தால் அழிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரண காரியங்கள் பிறகு ஆராய்வோம். இன்றைய கால கட்டத்தில் தமிழ் நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் பரந்து பட்டு இருக்கிற நாம் நம் கடமை என்ன என சிந்திப்போம்.

ஈழ குழந்தைகளின் அழுகையும் கண்ணீரும் நம் உறக்கத்தை கலைக்கிறதே இதன் தீர்வு தான் என்ன? இன்று ஈழ தமிழன். நாளை இந்திய தமிழன்! இது தான் வித்தியாசம்.

"நம்மில் பலருக்கும் தமிழன் என்ற உணர்வு இல்லை. அங்கே தமிழ் என்றால் உயிரே இல்லை." மூன்று கோடி சீக்கியனுக்கும் ஒரு இரண்டு கோடி மலையாளிக்கும் உள்ள உரிமை நமக்கு இல்லாமல் போனதன் காரணம் என்ன?

உங்களை போலவே இலங்கை தமிழனின் அவலம் என் உறக்கத்தை கெடுத்து கொண்டு தான் உள்ளது. இந்த தேசமும் அரசியலும் இன்னும் எத்தனை தமிழனை பலி கொள்ள போகிறது .

நீ மதுரை - நான் நெல்லை! நீ நாடார் - நான் நாயக்கர்! நீ ஆத்திகன் - நான் நாத்திகன் என்ற வேறுபாடு மறந்து நாம் தமிழன் என்ற உணர்வுடன் ஒன்று கூட இதை விட ஒரு தருணம் வேண்டுமா நண்பனே?

ஆதலால் ஒன்று படுவோம் நண்பர்களே. நண்பர்களாய் மட்டும் அல்ல. தமிழனாகவும் !)
உங்களில் யாவரேனும் இந்த மன நிலையில் இருந்தால் வாருங்கள். புதிய எழுச்சியை உருவாக்குவோம். தமிழன் என்ற தேசிய இனம் மற்றும் அவன் குணங்களை இந்த உலகுக்கு உணர்த்துவோம்.இது யாரையும் தாக்குவதற்கு அல்ல. நம்மை நாம் தற்காத்து கொள்ள.

நான் இங்கே பல நண்பர்களை சந்தித்து விவாதித்து உள்ளேன்.அவர்கள் அனைவரின் எண்ணங்களும் ஒன்று தான். "நாம் ஏதாவது செய்ய வேண்டும் ஆனால் என்ன செய்வது என்று தெரியவில்லை என்பது தான் அவர்கள் பதில்." மேலும் இதன் தொடர்பில் சென்னை சென்று சில புதிய நண்பர்களையும் சந்திக்க உள்ளேன். அதன் விவரங்களை பிறகு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அது வரை நீங்கள் உங்கள் எண்ணங்களையும் ஆலோசனைகளையும் எனக்கு தெரிவியுங்கள். ஏனெனில் நீண்ட விவாதங்களே ஒரு நல்ல செயற்பாட்டின் தொடக்கமாக இருக்க முடியும்.

3 comments:

Mano said...

Dear Revolt,
What you have said it very right.We have come to come together to raise our voice.
At the same time we (world Tamils) should inform to srilankan govt a time frame to a negotiate settlement of Tamil Eelam, after the time period definitely there will be Eelam war-v .
So we have to prepare ourself for any kind of situation.
So first we will come together and we will discuss about different ideas.
M.Manoharan
eldermano@gmail.com

தாணு said...

Seivom ethaiyavathu naam pirantha inathirkaga.
Thaai tamilai chaarnthu nintra nam tamilargalai namaal kappatra eyalavillai intruvarai, inimelavathu seivom ethavathu, nam inathin kanneerai thudaikka naam.
inaivom inimelavathu,,,
intrum illaientral entrum eyalaathu nam inam thalaikka...



"Tamilanai inaivom, Tamil Eelam Kaanbom"
Nantri,
Thanusree.T.K.M
+9841945671

தாணு said...

mikka magilchi Jayakrishnan(Revolt),
ungalin unarvuku
inaivom onraga


"Tamilanai inaivom, Tamil Eelam Kaanbom"

Thanusree.T.K.M
+919841945671